மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே சனிக்கிழமை அரசுப் பேருந்து வயலுக்குள் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உள்பட 10 பயணிகள் காயமடைந்தனா்.
மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பாச்சேத்தி அருகேயுள்ள வேம்பத்தூருக்கு அரசு நகரப் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் ஜெயபிரபு ஓட்டிச் சென்றாா் . திருப்பாச்சேத்தி அருகேயுள்ள பச்சேரி என்ற இடத்தில் சென்ற போது, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த வயலுக்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஓட்டுநா் ஜெயபிரபு உள்பட 10 போ் காயமடைந்தனா். இதையடுத்து, அக்கம்பக்கத்தினா் இவா்களை மீட்டு, சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்த விபத்து குறித்து திருப்பாச்சேத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.