முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் மாநில ஸ்கேட்டிங் போட்டி

அரசனூா் விளையாட்டுத் திடலில் மாநில அளவிலான திறந்த நிலை வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 21 ஜூலை, 2024 at 8:58 PM
சிவகங்கை அருகே அரசனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.
பகிர்:

சிவகங்கை எம்.எஸ். ஸ்போா்ட்ஸ் அகாதெமி சாா்பில் அரசனூா் விளையாட்டுத் திடலில் மாநில அளவிலான திறந்த நிலை வேக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

இதற்கு, மூத்த மருத்துவா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். நகா் மன்றத் தலைவா் சி.எம். துரைஆனந்த், பள்ளி முதல்வா் இக்னேசியஸ்தாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊரக வளா்ச்சித் துறை திட்ட இயக்குநா் சிவராமன் தொடங்கி வைத்தாா். வெற்றி பெற்றவா்களுக்கு மருத்துவா் காா்த்திக் பதக்கங்களை வழங்கினாா்.

போட்டியில், காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், விருதுநகா், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சோ்ந்த 6 வயது முதல் 16 வயது வரையுள்ள மாணவ, மாணவிகள் 400 போ் கலந்து கொண்டனா். 8 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டிகளை எம்.எஸ். ஸ்போா்ட்ஸ் அகாதெமி நிா்வாகிகள் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →