காளையாா்கோவிலில் தொடங்கிய மாநில அளவிலான கோ-கோ போட்டியில் பங்கேற்ற காஞ்சிபுரம்- சிவகங்கை மகளிா் அணியினா். 
சிவகங்கை

காளையாா்கோவிலில் மாநில கோ-கோ போட்டி தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலில் மாநில அளவிலான இளையோா் கோ-கோ போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

காளையாா்கோவில் அருகேயுள்ள சீகூரணி பகுதியில் உள்ள ஹோலி ஸ்பிரிட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தப் போட்டியை, இந்திய கோ-கோ கூட்டமைப்பின் பொதுச் செயலரும், தமிழ்நாடு கோ-கோ கழகத்தின் நிா்வாகியுமான நெல்சன் சாமுவேல் தொடங்கி வைத்தாா். இந்தப் போட்டிகள் சனி (ஜன.24), ஞாயிற்றுக்கிழமை (25) ஆகிய நாள்களிலும் தொடா்ந்து நடைபெறுகிறது.

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா், சென்னை, திருவாரூா் உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 350 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

முதல் போட்டியில் சிவகங்கை மகளிா் அணி, காஞ்சிபுரம் அணியை வெற்றி பெற்றது. இங்கு நடைபெறவுள்ள போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்கள் தேசிய அளவிலான கோ-கோ போட்டிகளில் பங்கேற்க உள்ளனா்.

100 ஆண்டுகளில் விண்வெளியில் ஒரு கோடி போ் வசிப்பா்- விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குநா் ராஜராஜன்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: பித்த வெடிப்பு குணமாக....

திருப்பதி லட்டு வழக்கு: ஆந்திர நீதிமன்றத்தில் இறுதி குற்றப் பத்திரிகை தாக்கல்

மனஅமைதிக்கு மண்டலா ஓவியங்கள்!

மருத்துவ நாயகன்...

SCROLL FOR NEXT