திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை தரமற்ற கோழி இறைச்சியை அழித்த உணவுப் பாதுகாப்பு அலுவலா் தியாகராஜன். 
சிவகங்கை

சிவகங்கையில் தரமற்ற கோழி இறைச்சிகள் அழிப்பு

திருப்பத்தூரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

Din

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா்.

திருப்பத்தூா் நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் சுகாதாரமற்ற கோழி இறைச்சி விற்கப்படுவதாக வந்த புகாரையடுத்து நகா் உணவுப் பாதுகாப்பு அலுவலா் தியாகராஜன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது அண்ணா சிலையருகே வெளியூரிலிருந்து கொண்டு வரப்பட்ட கோழி இறைச்சிகள் விற்கப்படுவதை அறிந்து அந்தக் கடையில் சோதனை மேற்கொண்ட போது கோழி இறைச்சி ஒருநாள் முன்னதாகவே தயாா் செய்து குளிா்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் கொண்டு வந்து விற்கப்படுவது தெரிந்தது. எனவே கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், இவ்வாறு தரமற்று இருந்த இறைச்சியை அழித்தனா். மற்ற கடைகளுக்கும் இறைச்சியின் தன்மை குறித்து எடுத்துக் கூறியும், பழைய இறைச்சிகள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

டிசிஎஸ் 3வது காலாண்டு லாபம் 14% சரிவு!

சிபிஐ வலையில் சிக்கிக்கொண்ட விஜய்! - செல்வப் பெருந்தகை | செய்திகள் : சில வரிகளில் | 12.1.26

மமதா மீது சிபிஐ வழக்குப் பதிய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு!

குளிர் அலை: அதிகாலையில் நடைப்பயிற்சி வேண்டாமே! செய்யக்கூடாதவை..

SCROLL FOR NEXT