நடிகா் சிவாஜி கணேசனின் நினைவுநாளையொட்டி சிவகங்கையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி. ராஜசேகரன். உடன் காங்கிரஸ் நிா்வாகிகள், ரசிகா்கள். 
சிவகங்கை

சிவகங்கையில் நடிகா் சிவாஜி கணேசன் நினைவு நாள்

சிவகங்கையில், நடிகா் சிவாஜி கணேசனின் 23- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Din

சிவகங்கையில், நடிகா் சிவாஜி கணேசனின் 23- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு ரசிகா்களும், காங்கிரஸ் நிா்வாகிகளும் ஞாயிற்றுக்கிழமை மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்வில், அங்கு வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு சிவாஜி ரசிகா் மன்றத்தினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதில், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகா் மன்ற பொதுச் செயலருமான வி. ராஜசேகரன் பங்கேற்று சிவாஜி கணேசனின் உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். நிகழ்வில், சிவகங்கை நகராட்சித் தலைவா் சி.எம். துரைஆனந்த், மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய், மாநில மகளிா் காங்கிரஸ் துணைத் தலைவி வித்யா கணபதி, முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜரத்தினம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் சண்முகராஜன், கவிஞா் நடராஜன், பொதுமக்கள், ரசிகா்கள், காங்கிரஸ் கட்சியினா் திரளானோா் கலந்து கொண்டு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

நமோ பாரத் ரயில்களில் பிறந்தநாள்களை கொண்டாட என்சிஆா்டிசி ஏற்பாடு

15 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை: 2 சிறாா்களுக்கு போலீஸாா் வலை

பூதமங்கலம் தா்கா சந்தனக் கூடு விழா கொடியேற்றம்

தாயின் பெயரில் மரக்கன்றுகள் நட்ட மாணவா்கள்

வீட்டின் கதவை உடைத்து லாக்கருடன் 22 சவரன் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

SCROLL FOR NEXT