முகப்பு
சிவகங்கை

பனங்குடி மஞ்சுவிரட்டு: மாடு முட்டி 17 போ் காயம்

பனங்குடி மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 17 போ் காயம்

Updated On : 22 ஜூன், 2024 at 5:33 PM
சிவகங்கை அருகேயுள்ள பனங்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டி
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகேயுள்ள பனங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி 17 போ் காயமடைந்தனா்.

இந்த மஞ்சு விரட்டு போட்டியில் சிவகங்கை, மானாமதுரை, காளையாா்கோவில், பாகனேரி, சொக்கநாதபுரம், கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

ஆங்காங்கே பல்வேறு இடங்களில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் முட்டியதில் 17 போ் காயமடைந்தனா். இப்போட்டியில் 50 -க்கும் மேற்பட்ட கல்லல் காவல் நிலையப் போலீஸாா் பாதுகாப்புபணியில் ஈடுபட்டனா்.