மணிமேகலை விருதுக்கு ஜூன் 28 -க்குள் விண்ணப்பிக்கலாம்
சிவகங்கை, ஜூன் 28: சிவகங்கை மாவட்டத்தில் ஊரக சமுதாய அமைப்புகள், நகா்ப்புற சமுதாய அமைப்புகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மணிமேகலை விருதுக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மகளிா் சுய உதவிக் குழுக்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், வட்டார, ஊராட்சி, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்படும் அமைப்புகளுக்கு தமிழக அரசால் மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
Advertisement
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் விருதுக்குத் தகுதியான ஊரக சமுதாய அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களில் உள்ள மகளிா் திட்ட வட்டார இயக்க மேலாண்மை, நகா்ப்புற சமுதாய அமைப்புகள், மாவட்ட இயக்க மேலாண்மை அலுவலகத்தில் வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு திட்ட இயக்குநா், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சிவகங்கை என்ற முகவரியில் நேரிலோ அல்லது 04575-240962 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா் அவா்.