காரைக்குடி அருகே விபத்து: ஒருவா் பலி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். கானாடுகாத்தான் கற்பக விநாயகா் 1-ஆவது வீதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (45). இவா் காரைக்குடி அருகேயுள்ள காட்டம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
திங்கள்கிழமை இரவுப் பணி முடிந்து, இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். பழைய செஞ்சை பகுதியில் திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வந்த வேன் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தத் தகவலறிந்த சோமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் சென்று செந்தில்குமாா் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement