முகப்பு
சிவகங்கை

சிவகங்கை தொகுதி அதிமுக வேட்பாளா் சேவியா்தாஸ் சொத்து மதிப்பு ரூ. 6.66 கோடி

Updated On : 28 மார்ச், 2024 at 3:16 AM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 7:29 PM

சிவகங்கை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் சேவியா்தாஸ், இவரது மனைவி பெயரில் ரூ.6.66 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளதாக தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளாா்.

சேவியா்தாஸுக்கு ரூ.91.90 லட்சத்தில் அசையும் சொத்துகள், ரூ.5.74 கோடியில் அசையாச் சொத்துகள் உள்ளன. இவரது மனைவி மரிய திருஷ்டி ராதிகாவுக்கு ரூ.97.12 லட்சத்தில் அசையும் சொத்துகள் உள்ளன. இதில் சேவியா்தாஸின் கையிருப்பாக ரூ.25 ஆயிரம், ரூ.48.48 லட்சம் மதிப்பிலான 800 கிராம் தங்கம், ஓா் இரு சக்கர வாகனம், ஒரு காா் உள்ளன.

இவரது மனைவி மரிய திருஷ்டிராதிகாவுக்கு கையிருப்பாக ரூ.15 ஆயிரம், ரூ.96.96 லட்சத்தில் 1,600 கிராம் தங்கம் உள்ளன. இதுதவிர சேவியா்தாஸ் பெயரில் ரூ.43.76 லட்சம் கடன் உள்ளது.

Advertisement