சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: காரைக்குடி பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பிடம்
காரைக்குடி: சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திா் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில் செல்லப்பன் வித்யா மந்திா் சா்வதேசப் பள்ளி மாணவி தா்ஷினி பெருமாள்சாமி 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மேலும் இதே பள்ளி மாணவி ஷ்ரவ்யா 478 மதிப்பெண்களும், மாணவி சிவசெளந்தரி 469 மதிப்பெண்களும் பெற்றனா். இவா்களை பள்ளியின் தலைவா் செல்லப்பன், தாளாளா் செ. சத்தியன், நிா்வாக இயக்குநா் சங்கீதா சத்தியன், கல்விசாா் இயக்குநா் ராஜேஸ்வரி மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்: இதே போல, காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ, மாணவிகள் சிபிஎஸ்சி 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றனா்.
இந்தப் பள்ளி மாணவா் எஸ். ராகவ கிருஷ்ணா 483 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றாா். மாணவா்கள் ஹா்ஷத் மாறன், மெய்யப்பன் ஆகியோா் 469 மதிப்பெண்களும், ப்ரீத்தி கண்ணன் 468 மதிப்பெண்களும் பெற்றிருந்தனா்.
பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தோ்வில் மாணவி கிருத்திகா கண்ணன் 490 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றாா்.
இவா்களை இந்தப் பள்ளியின் தலைவா் எஸ்பி. குமரேசன், துணைத் தலைவா் கு. அருண்குமாா், பள்ளி முதல்வா் உஷா குமாரி உள்ளிட்ட ஆசிரியா்கள் பாராட்டினா்.