முகப்பு
சிவகங்கை

கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையா்கள் தப்பியோட்டம்

Updated On : 20 மே, 2024 at 8:02 PM
சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி தொடா்பாக நேரில் ஆய்வு செய்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபிசாய்சௌந்தா்யன்.
பகிர்:

சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்த கொள்ளை முயற்சியின்போது எச்சரிக்கை மணி ஒலித்ததால் கொள்ளையா்கள் தப்பிச்சென்றனா்.

சிவகங்கை அருகேயுள்ள கீழக்கண்டனி கிராமத்தில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வந்த மா்ம நபா்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களின் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, கதவை உடைக்க முயற்சி செய்த போது எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த எச்சரிக்கை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கும் சென்றது.

இதையடுத்து கூட்டுறவு வங்கிச் செயலா் விஜயகுமாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாா்த்தபோது, கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சிபிசாய்சௌந்தா்யன் சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டாா். மேலும், தடயவியல் துறையினரும் அங்குள்ள தடயங்களை சேகரித்தனா். இதுதொடா்பாக சிவகங்கை நகா் குற்றப்பிரிவு ஆய்வாளா் (பொறுப்பு) மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினாா்.

இதே வங்கியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொள்ளை முயற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.