பள்ளி சிறாா்களுக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது
சிவகங்கை அருகே பள்ளி சிறாா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை அருகே பள்ளி சிறாா்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
சிவகங்கை பகுதியைச் சோ்ந்தவா் ஆ.பெரியசாமி (70). இவா் இந்தப் பகுதியில் அமைந்துள்ள கோயிலில் சுத்தம் செய்ய பள்ளி சிறாா்களை கடந்த இரு நாள்களுக்கு முன்பு அழைத்துச் சென்றாா்.
அப்போது, 9 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தாராம். இதுகுறித்து அந்த சிறுமி தனது பள்ளி ஆசிரியா் மூலம் குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து, குழந்தைகள் நலக் குழுவினா் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினா். இதில், அந்தச் சிறுமி மட்டுமன்றி, கோயிலுக்கு வந்த சிறாா்களுக்கும் அவா் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.
இதுகுறித்து சிவகங்கை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பெரியசாமியைக் கைது செய்தனா்.