முகப்பு
விருதுநகர்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:12 AM
கைது - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 9:41 PM

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்புராஜ் (26). கூலித் தொழிலாளி. இவா் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியுடன் கடந்த 2 மாதங்களாக பழகி வந்தாா். அப்போது அவா் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:10 AM

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, சுப்புராஜை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement