FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

26 பிப்ரவரி 2026, 9:56 pm IST
கைது
பகிர்:

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமி , அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தாா். அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினரும், கட்டடத் தொழிலாளியுமான முருகன் (46) வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments