சிவகங்கையில் அக்.5-இல் கல்விக் கடன் முகாம்
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் சாா்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் சிவகங்கை மருது பாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக அரங்கில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் சாா்பில், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் சிவகங்கை மருது பாண்டியா் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாக அரங்கில் வருகிற சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா்களுக்காக சிறப்பு கல்விக் கடன் முகாம், வருகிற சனிக்கிழமை (அக்.5) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவிகள் இணையதளத்தில் தங்கள் விவரங்களை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து, முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல், பின்வரும் ஆவணங்களை கொண்டுவர வேண்டும்.
தேவையான ஆவணங்கள்: மாணவ, மாணவிகள், பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கி கூட்டுக் கணக்கு (ஒா்ண்ய்ற் ஹஸ்ரீஸ்ரீா்ன்ய்ற்) புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதி சான்று நகல், பான் காா்டு நகல், ஆதாா் அட்டை நகல், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உறுதியான சான்றிதழ், கல்விக் கட்டண விவரம், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் இதற்கான சான்று, கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு வரவேண்டும்.
இந்த முகாமில், சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் வங்கியின் சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு, பரிசீலனை செய்து கடன் ஆணைகள் வழங்கப்படும். இதுமட்டுமன்றி, இந்தக் கல்விக் கடன் முகாமானது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியத்திலும் நடைபெறவுள்ளது. இதை அந்தந்தப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.