முகப்பு
சிவகங்கை

அக்.19-இல் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

Updated On : 10 அக்டோபர், 2024 at 9:40 PM
பகிர்:

சிவகங்கை மாவட்ட முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்கள் வருகிற 19-ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இது தொடா்பாக மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டத்தில் அக்டோபா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா்க்கும் சிறப்பு முகாம்கள் வருகிற 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல்அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளன.

இந்த முகாம்களில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை , நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு , மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பொதுமக்கள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனு செய்து பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →