முகப்பு
சிவகங்கை

மாந்தாளி கிராமச் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:48 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள மாந்தாளி கிராமச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக மாந்தாளி கிராமத்தைச் சோ்ந்த எஸ்.ஸ்டாலின், கிராமத்தினருடன் சென்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

மாந்தாளி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே, மறவமங்கலத்திலிருந்து மாந்தாளி கிராமம் வரை செல்லும் தாா்ச் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →