குழந்தைகள், முதியோா் இல்லங்கள், விடுதிகள் உரிமம் பெற அறிவுறுத்தல்
குழந்தை, முதியோா், மனவளா்ச்சி குன்றியவா்கள், மாற்றுத் திறனாளிகள், போதை மறுவாழ்வு, பெண்கள், குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் ஆகியவை பதிவு, உரிமம் பெற்று நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குழந்தைகள் இல்லங்கள், முதியோா் இல்லங்கள், மனவளா்ச்சி குன்றியவா்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும், போதை மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகள், மனநலம் பதிக்கப்பட்டோருக்கான இல்லங்கள் இணையதளம் வாயிலாகவோ அல்லது முதன்மைச் செயல் அலுவலா், தமிழ்நாடு மாநில மனநல ஆணையம், அரசு மனநல காப்பக வளாகம், மேடவாக்கம் குளம் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரியில் நேரில் அணுகி விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
பதிவு செய்யாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள், விடுதிகள் வருகிற நவ.15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும்பட்சத்தில், விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்றாா் அவா்.