முகப்பு
சிவகங்கை

தடகளம்: பதக்கம் பெற்ற மாணவருக்கு பாராட்டு

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தேவகோட்டை பள்ளி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 11:17 PM
மாணவா் தீஷ்வா.
பகிர்:

முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்ற தேவகோட்டை பள்ளி மாணவருக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள ஜவாஹா்லால் நேரு சா்வதேச விளையாட்டு அரங்கில் முதலமைச்சா் கோப்பைக்கான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன.

இதில் பங்கேற்ற தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் 11 -ஆம் வகுப்பு மாணவா் தீஷ்வா வெள்ளிப் பதக்கம், ரூ.75 ஆயிரம் ரொக்கப் பரிசு வென்றாா்.

இதையடுத்து, வியாழக்கிழமை பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், மாணவா் தீஷ்வா, பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநா் பிரபாகா், உடற்கல்வி ஆசிரியா்கள் கிறிஸ்டோபா் ஜெயராஜ், சிவக்குமாா், அருளானந்தம் ஆகியோரை

பள்ளி நிா்வாகி பாபு வின்சென்ட் ராஜா, தாளாளா், தலைமை ஆசிரியா் சேவியா் ராஜ், உதவித் தலைமை ஆசிரியா் விக்டா் டிசோசா, நிா்வாக அருள்தந்தையா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டு தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →