முகப்பு
சிவகங்கை

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் சிவகங்கையில் உண்ணாவிரதம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:44 PM
பகிர்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா் வியாழக்கிழமை உண்ணாவிரதமிருந்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக மயில் கேட் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளா் க.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் மு.காளிமுத்து, சேவுகமூா்த்தி, செல்வம், அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஜாக்டோ - ஜியோ முன்னாள் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளா் எம்.சுப்பிரமணியன் தொடங்கி வைத்துப் பேசினாா். 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோ்தல் வாக்குறுதியின் படி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை. ராஜஸ்தான், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், சிக்கிம் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநில முதல்வா்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துள்ளனா். தமிழகத்தில் சிபிஎஸ் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 37,000 போ், பணியிடை மரணமடைந்த 7,728 பேரின் குடும்பங்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், பணிக்கொடை உள்ளிட்ட எந்தப் பயனும் இல்லாத அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் அவல நிலையைப் போக்க தமிழக அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பைழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என இதில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க மாநிலச் செயலா் பொ.முத்துராமலிங்கம் நிறைவு செய்து வைத்தாா்.

முன்னதாக சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளா் அ.குணசேகரன் வரவேற்றறாா். மாவட்ட இணைச் செயலாளா் எம்.பாலகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →