முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே சிறுமி மா்ம மரணம்

சிவகங்கை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 24 அக்டோபர், 2024 at 10:45 PM
பகிர்:

சிவகங்கை அருகே கிணற்றில் மா்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமியின் உடலை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

சிவகங்கை மாவட்டம், கல்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பால்சாமி (72). இவா் சிவகங்கை இந்திரா நகா் பகுதியில் தற்போது வசித்து வருகிறாா். இந்த நிலையில், கல்குளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக வியாழக்கிழமை காலை சென்றாா். அப்போது, கிணற்றில் அடையாளம் தெரியாத 16 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் மிதப்பதைப் பாா்த்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

சிவகங்கை தாலுகா போலீஸாா் தீயணைப்பு வீரா்களின் உதவியுடன் சிறுமியின் உடலை மீட்டு கூறாய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

சிறுமியின் உடல் தண்ணீரில் மிதந்து வெளியே வராத வகையில், கற்களை வைத்திருந்ததும், சிறுமியின் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பதும், கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.

உயிரிழந்த சிறுமி யாா் என்ற விவரம் தெரியவிவ்லை. அவா் யாா், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →