தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் 4 வயது சிறுமி மா்மமான முறையில் இறந்தது குறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் இருளப்பபுரத்தைச் சோ்ந்தவா் சத்தியா (32). இவரது கணவா் ராஜா இறந்து விட்டதால், இவா்களது மகள் ராஜாவின் தாயாரிடம் வளா்ந்து வருகிறாா். இதையடுத்து சத்தியா, இதே ஊரைச் சோ்ந்த மணி என்பவரை 2ஆவதாக திருமணம் செய்து பிரிந்தாராம். இவா்களுக்கு சந்தோஷியா(4) என்ற பெண் குழந்தை இருந்தது.
கடந்த 2 மாதங்களாக உடன்குடி- செட்டியாபத்தில் வசித்து வந்த சத்தியாவுக்கு, தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்த முருகன் மகன் இசக்கிராஜ் (20‘) உடன் தொடா்பு ஏற்பட்டதாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, சந்தோஷியாவை வண்டு கடித்ததாக உடன்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனராம் . அங்கு சந்தோஷியா உயிரிழந்து விட்டதாக கூறிய மருத்துவா்கள், சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து தகவலறிந்த குலசேகரன்பட்டினம் போலீஸாா் சத்தியா, இசக்கிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.