காரைக்குடி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஸ்ரீ வத்சவாவிடம் கோரிக்கை மனு அளித்த காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, நிா்வாகிகள். 
சிவகங்கை

காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வலியுறுத்தி, மதுரை கோட்ட மேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Din

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வலியுறுத்தி, மதுரை கோட்ட மேலாளரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

காரைக்குடி ரயில் நிலைய அதிகாரிகள், பணியாளா்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளா் ஸ்ரீ வத்சவா தனி ரயிலில் அதிகாரிகளுடன் காரைக்குடி வந்தாா். அவருக்கு ரயில் நிலைய மேலாளா், அதிகாரிகள், பணியாளா்கள் வரவேற்பு அளித்தனா்.

இதைத் தொடா்ந்து, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி தலைமையில் இணைச் செயலா்கள் ஏ.ஆா். கந்தசாமி, எஸ். சையது, ரயில் பயணிகள் சங்க முன்னாள் பொருளாளா் ராமச்சந்திரன் ஆகியோா் அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவில், அஜ்மீா் விரைவு ரயில் காரைக்குடியில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேசுவரம் - ஹூப்ளி - செகந்திராபாத் வாராந்திர ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும். காரைக்குடி ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்க வேண்டும்.

பிட்லைன் தடத்தை மேம்படுத்த வேண்டும். பழைய நடை மேம்பாலத்திலுள்ள மின்தூக்கி வசதியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

எங்கள் ஆதரவின்றி யாரும் மும்பையின் மேயர் ஆக முடியாது: காங்கிரஸ் எம்பி பேச்சு!

கருப்பு பல்சர் வெளியீட்டுத் தேதி!

வேதாரண்யம் பகுதியில் தொடர் மழை! வேளாண் பயிர்கள் பாதிக்கும் அபாயம்!

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணா விருது: முதல்வர் ஸ்டாலின்

கரூர் சம்பவம்: தில்லி சிபிஜ அலுவலகத்தில் ஜன.19-ல் விஜய் ஆஜராக சம்மன்!

SCROLL FOR NEXT