முகப்பு
சிவகங்கை

சிறுமியை ஆபாசமாக பேசிய முதியவருக்கு 2 ஆண்டுகள் சிறை

ஒன்பது வயது சிறுமியை பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசிய முதியவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:43 PM
பகிர்:

ஒன்பது வயது சிறுமியை பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசிய முதியவருக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மூக்கன் (72). இவா் அதே பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமியை கடந்த 2017, மே 3 -ஆம் தேதி பாலியல் ரீதியாக ஆபாசமாகப் பேசினாராம்.

இதுகுறித்து திருப்பத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூக்கனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த போக்சோ நீதிபதி (பொறுப்பு) கோகுல் முருகன், மூக்கனுக்கு இரு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சாா்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் வேண்டுமென வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →