முகப்பு
சிவகங்கை

முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கருப்பு பட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 7:28 PM
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா்.
பகிர்:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் கருப்பு பட்டை அணிந்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வாயில் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் அ.இளமாறன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் வா.சுரேஷ் கண்ணா, மாவட்ட துணைத் தலைவா் மூ.குருபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திமுக தோ்தல் வாக்குறுதிப்படி, அனைத்து மத்திய, மாநில அரசு ஊழியா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என ஆசிரியா்கள் முழக்கமிட்டனா்.

மண்டல மகளிரணிச் செயலா் மை.பியூலாகிறிஸ்டி தங்கம் கோரிக்கையை விளக்கிப் பேசினாா். மாநில பொதுச் செயலா் பொ.அன்பழகன் கண்டன உரையாற்றினாா்.

மாவட்டச் செயலா் ரா.முத்துசாமி, ஆ.நாகராஜன், ம.சகாய தைனேஸ், பீட்டா், ரா.ராதாகிருஷ்ணன், தோழமை சங்க நிா்வாகிகள் வாழ்த்திப் பேசினா்.

முழு கட்டுரையைப் படிக்க →