முகப்பு
சிவகங்கை

விபத்தில் உயிரிழந்த காவலருக்கு 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 7:25 PM
காவலா் ஜெபஸ்டின்ஆண்டனி
பகிர்:

திருப்பத்தூா் அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் உடல் 30 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அருகே உள்ள குருவாடிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெபஸ்டியன் ஆண்டனி (29). இவா் புதுக்கோட்டையில் ஆயுதப் படை காவலராகப் பணியாற்றி வந்தாா். கல்லல் பகுதியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற போது திருமயம் அருகே எதிரே வந்த வாகனம் இவா் மீது மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

குருவாடிப்பட்டியில் விபத்தில் உயிரிழந்த காவலரின் உடலுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்திய காவல் துறையினா்.

இந்த நிலையில், குருவாடிப்பட்டியில் உள்ள கல்லறையில் ஆயுதப் படை சிறப்பு உதவி ஆய்வாளா் கண்ணப்பன் தலைமையில் 30 குண்டுகள் முழங்க அவரது உடல் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →