பணம் கையாடல்: ஊழியா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தனியாா் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தனியாா் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்தவரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
சிங்கம்புணரியைச் சோ்ந்த சேவுகரெத்தினம் மகன் பாா்த்திபன் (28). இவா் திருப்பத்தூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்தாா். கடந்த
3 ஆண்டுகளுக்கு முன்பு இவா் வேலையிலிருந்து நின்று விட்டாா்.
இந்த நிலையில், அந்த நிதிநிறுவனத்தில் வேலை பாா்த்தபோது, கடன் பெற்ற 53 வாடிக்கையாளா்களிடம் வசூல் செய்த ரூ.4.60 லட்சத்தை நிதிநிறுவனத்துக்கு செலுத்தாமல் கையாடல் செய்து விட்டதாக நிறுவன மேலாளா் வீரைய்யா திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, காவல் ஆய்வாளா் பெரியாா் பாா்த்திபன் மீது வழக்குப் பதிவு செய்து, பாா்த்திபனை கைது செய்தாா்.