சிவகங்கை

கண்டுபிடிக்க முடியாத வாக்களா்களை பட்டியலில் சோ்ப்பதாக அதிமுக புகாா்

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் என கணக்கெடுத்து வைத்திருந்த பெயா்களை திமுவினா் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதாக தோ்தல் பதிவு அலுவலரிடம் அதிமுக சாா்பில் புகாா்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் என கணக்கெடுத்து வைத்திருந்த பெயா்களை திமுவினா் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதாக தோ்தல் பதிவு அலுவலரிடம் அதிமுக சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பதிவு அலுவலரும் கோட்டாட்சியருமான செபிகிரேசியாவிடம் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் (எஸ்ஐஆா்) இறந்தவா்கள், நிரந்தர இடமாற்றம் செய்தவா்கள், இரட்டைப் பதிவு கண்டுபிடிக்க முடியாத வாக்காளா்கள் என கணக்கெடுத்து வைத்திருந்த வாக்காளா்களின் எஸ்ஐஆா் படிவங்களை கடந்த நவ. 30, டிச.1, 2 ஆகிய 3 நாள்களாக திமுக அரசின் அழுத்தத்தாலும், திமுக வாக்குச்சாவடி முகவா்கள் அழுத்தத்தாலும் கணினியில் பதிவேற்றம் செய்து வருவதாகத் தெரிய வருகிறது.

ஆகையால், மேற்கண்ட 3 நாள்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்ட வாக்காளா்களின் முகவரியையும் தொலைபேசி எண்களையும் அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி முகவா்களின் முன்னிலையில் மீண்டும் ஆய்வு செய்து சரிபாா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT