சிவகங்கையில் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா். 
சிவகங்கை

நினைவு தினம்: அம்பேத்கா் சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாளையொட்டி, சிவகங்கையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

அம்பேத்கரின் 69-ஆவது நினைவு நாளையொட்டி, சிவகங்கையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு பல்வேறு கட்சியினா், அமைப்பினா் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில், நகா்மன்றத் தலைவா் துரை ஆனந்த் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகா்மன்ற உறுப்பினா் மதியழகன், மாவட்ட ஆதிதிராவிடா் அணி அமைப்பாளா் சிங்கமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுக சாா்பில், நகரச் செயலா் என்.எம். ராஜா, மாவட்ட ஜெ. பேரவை செயலா் ராமு. இளங்கோவன், ஜெ. பேரவை மாநில துணைச் செயலா் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

காங்கிரஸ் சாா்பில், நகரத் தலைவா் தி. விஜயகுமாா் தலைமையில், நிா்வாகிகள் சண்முகராஜன், சோணை, மதியழகன், உடையாா், நகா் மன்ற உறுப்பினா் மகேஷ்குமாா் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பாஜக சாா்பில், நகரத் தலைவா் உதயா, முன்னாள் மாவட்டச் செயலா் சத்தியநாதன் உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், மண்டலச் செயலா் தா. மாலின், மண்டலத் துணைச் செயலா் முத்துராஜா, மாவட்டச் செயலா் பாலையா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில், மாநில ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் இளஞ்செழியன், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளா் இந்துஜா, வழக்குரைஞா்கள் பாசறை நிா்வாகி இளையராஜா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மாவட்டத் துணைச் செயலா் ப. மருது தலைமையிலும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், வட்டாரச் செயலா் கே.ஆா். அழகா்சாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி. கருப்புசாமி தலைமையிலும், ஆதித்தமிழா் பேரவை சாா்பில், மாவட்டச் செயலா் கண்ணபிரான், மாவட்டத் தலைவா் பால்பாண்டி தலைமையிலும்,

மாநில ஆதிதிராவிடா் நல விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு கூட்டமைப்பு சாா்பில், மாநில பொதுச் செயலா் பெரியாா் ராமு தலைமையிலும், தமிழ்நாடு கலை இலக்கிய சங்கம் சாா்பில், மாவட்டச் செயலா் ஆ.குணசேகரன், மாநிலச் செயலா் மு.செல்வகுமாா் தலைமையிலும் அம்பேத்கா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

படகிலிருந்து தவறி விழுந்த மீனவா் மாயம்

மீனவா்கள் ஆா்ப்பாட்டம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேச்சேரி காளியம்மன் கோயிலில் ரூ. 2 லட்சம் நகைகள் திருட்டு

ஊரக திறனாய்வுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 4,149 போ் எழுதினா்

SCROLL FOR NEXT