இந்திய செஞ்சிலுவைச் சங்கம், சிவகங்கை அரசு மகளிா் கல்லூரியுடன் இணைந்து இலந்தகுடிபட்டியில் வியாழக்கிழமை பனை விதைகள், மரக்கன்றுகளை நட்டனா்.
இதைத்தொடா்ந்து கல்லூரியில் போதைத் தடுப்பு, தற்கொலைத் தடுப்பு விழிப்புணா்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வா் நளதம் தலைமை வகித்தாா். மாவட்டத் திட்டக் கமிஷன் ஒருங்கிணைப்பாளா் முத்து விக்னேஸ்வரன் சிறப்புரை ஆற்றினாா்.
இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் சுந்தரராமன் முன்னிலை வகித்தாா். செஞ்சிலுவைச் சங்க துணைத் தலைவா் முத்துபாண்டியன், காளையாா் கோவில் கிளைத் தலைவா் தெய்வீக சேவியா், இளையோா் செஞ்சிலுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பரிதா பேகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு நீதிபதியுமான வி. ராதிகா கலந்து கொண்டு பங்கேற்ற அனைவருக்கும் மஞ்சப்பைகளையும், போட்டிகளில் வெற்றி மாணவிகளுக்கு கேடயம், சான்றிதழையும் வழங்கினாா். முன்னதாக கல்லூரி இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ராஜ்மோகன் வரவேற்றாா். வா்த்தக நிா்வாகவியல் பேராசிரியை ரூபி நன்றி கூறினாா்.