சிவகங்கை

பைக் விபத்தில் பெண் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

இளையான்குடி ஒன்றியம், கொழுவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது மனைவி கலைவாணி (38). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் பரமக்குடிக்குச் சென்றுவிட்டு, கிராமத்துக்கு சனிக்கிழமை திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் கலைவாணி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட கலைவாணி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து இளையான்குடி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT