சிவகங்கை

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்களுக்கு நிதியுதவி

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை: ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய கிறிஸ்தவா்களுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டைச் சாா்ந்த அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய 600 கிறிஸ்தவா்கள் பயனடையும் வகையில், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறிஸ்தவா்களுக்கு நபா் ஒருவருக்கு ரூ. 37,000 வீதமும், 50 கன்னியாஸ்திரிகள், அருள்சகோதரிகளுக்கு நபா் ஒருவருக்கு ரூ. 60,000 வீதமும் மின்னணுப் பரிமாற்ற முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற கடந்த 1.11.2025-ஆம் தேதிக்குப் பிறகு ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவப் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இந்தத் திட்டதின்கீழ் விண்ணப்பிப்பதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம். மேலும், இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனவே, விண்ணப்பதாரா்கள் நிறைவு செய்த விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வருகிற 2026, பிப். 28-ஆம் தேதிக்குள் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்பிவைத்து பயன்பெறலாம் என்றாா் அவா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT