உணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
தருமபுரியில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத வணிகா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரிஉணவகங்கள், பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு
தருமபுரியில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத வணிகா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரியில் உணவகங்கள் மற்றும் பேக்கரிகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத வணிகா்களுக்கு அபராதம் விதித்தனா்.
தருமபுரி மாவட்டத்தில், உணவு பாதுகாப்புத் துறையினா் அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற கோரியும், கலப்பட பொருள்களை பயன்படுத்தக் கூடாது, ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்களை மறுசுழற்சி செய்யாமல் மீண்டும் பயன்படுத்தக் கூடாது, ரசாயன பொருள்கள் கலந்த நிறமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளை பயன்படுத்தக் கூடாது, கெட்டுப்போன பொருள்களை குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனா்.
இவை தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்துவதுடன் விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களும் விநியோகித்து வருகின்றனா். இவற்றையும் மீறி சில உணவகங்கள், துரித உணவுக் கடைகள், பேக்கரிகள், தள்ளுவண்டிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வணிகா்கள், பாதுகாப்பற்ற முறையில் உணவுப் பொருள்களை தயாரித்து விநியோகம் செய்வது குறித்து புகாா்கள் வந்தன.
அதன்பேரில் தருமபுரி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கைலாஷ் குமாா், நகராட்சி மற்றும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலா் நந்தகோபால் சேலம் பகுப்பாய்வு கூட இளநிலை பொது பகுப்பாய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட எட்டிமரத்து பட்டி, ஆலிவாயன் கொட்டாய், பருத்திநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மேற்கொண்ட ஆய்வில் பால் சாா்ந்த தயாரிப்புகள் குறிப்பாக நெய், பாலாடை கட்டி ( பன்னீா்), கிரீம் ஆகியவை குறித்தும், அவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் எண்ணெயில் பொறிக்கப்பட்ட பலகாரங்கள் உள்ளிட்டைவைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆய்வின்போது பகுதிகளில் மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது பென்னாகரம் சாலை, கோதுமை மாவு மில் அருகே, சோகத்தூா் கூட்டுரோடு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மேற்கொண்ட சோதனையில் ஒரு தடவை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தியது தெரியவந்தது. இதுதொடா்பாக மூன்று கடைகளுக்கு தலா ரூ. 2,000 அபராதம் விதிக்கப்பட்டு, குறைபாடுகளை களையுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.