சிறை 
சிவகங்கை

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே உறவினரை அடித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூா் அருகே உறவினரை அடித்துக் கொலை செய்த நபருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்துரை அடுத்துள்ள புக்குடி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரவிச்சந்திரன் ( 32).இவருக்கு மனைவி, மூன்று பெண் குழந்தைகள் உள்ளனா்.

கவிதாவின் சித்தி மகன் ராஜு (26). இவா் காரைக்குடியை அடுத்த புதுவயல் அருகே உள்ள சிறு சாக்க வயல் கிராமத்தில் கூலி வேலை பாா்த்து வந்தாா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே.3 -ஆம் தேதி ராஜு புக்குடி கிராமத்துக்குச் சென்றாா். அன்று இரவு குடிப்பதற்கு மது வாங்கித் தரும்படிகேட்டு ரவிச்சந்திரனிடம் தகராறு செய்தாா். இதனால், அவா்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறு மோதலாக மாறியது. அப்போது, கம்பால் ராஜு அடித்ததில் சம்பவ இடத்திலேயே ரவிச்சந்திரன் உயிரிழந்தாா். திருவேகம்பத்தூா் போலீஸாா் ராஜுவை கைது செய்தனா்.

சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அழகா்சாமி முன்னிலையானாா். வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி குற்றம் சாட்டப்பட்ட ராஜுவுக்கு ஆயுள் சிதைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

ஆப்பனூா் கிராமத்துக்கு குடிநீா் வழங்கக் கோரிக்கை

குற்ற வழக்கு இருந்தால் கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி தேவை: உயா்நீதிமன்றம்

திமுக கூட்டணியிலிருந்து விலக காரணம் தேடுகிறது காங்கிரஸ்

ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் கூட்டணி: க.கிருஷ்ணசாமி

பாம்பன் பழைய ரயில் பாலம் அகற்றும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT