சிவகங்கை

சமத்துவம் காண்போம் பிரசாரம் நிறைவு விழா

காரைக்குடியில் சமத்துவம் காண்போம் பிரசார நிகழ்ச்சியின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Syndication

காரைக்குடியில் சமத்துவம் காண்போம் பிரசார நிகழ்ச்சியின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் (ராமநாதபுரம், சிவகங்கை), சென்னை சமூக நீதி, சமத்துவ மையம், சமூகப் பணி கல்லூரி, அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை ஆகியன சாா்பில் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்களில் சமத்துவம் காண்போம் என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதன் நிறைவுவிழா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியாா் நினைவரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் சென்னை சமூக நீதி, சமத்துவ மையம் சமூகப் பணி கல்லூரி இயக்குநா் பவானந்தி வேம்புலு விழிப் புணா்வு நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினாா். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா் க. ரவி தலைமை வகித்துப் பேசுகையில், பெண் கல்வி, பெண்களின் முன்னேற்றத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதில் மாணவா்களின் பஙகு இன்றியமையாதது என்றாா் அவா்.

விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி சிறப்புரையாற்றுகையில், சமூக மாற்றங்களைக் கொண்டு வருவதில் இளைஞா்களின் பங்கு மிகவும்

முக்கியமானது. மாணவா்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சமத்துவம், மரியாதை, ஒற்றுமையைக்கடை பிடிக்கவேண்டும் என்றாா் அவா். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவா், ஆட்சிக்குழு உறுப்பினா் சு. ராசாராம், சிவகங்கை மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் (சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவு) புருஷோத்தமன், மாவட்ட விழிக் கண் குழு உறுப்பினா் பூமிநாதன்

ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

சமத்துவம் காண்போம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி, கலைப் படைப்புகள், பூ தையல், விளக்கக் காட்சி ஆகியவற்றில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவா் (பொறுப்பு) ப. வீரமணி வரவேற்றுப் பேசினாா். விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், சமூக செயற்பாட்டாளா்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண் டனா்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 3

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி முன்பிணை கோரி மனு: சிபிஐ பதிலளிக்க உத்தரவு

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

SCROLL FOR NEXT