சிவகங்கை

தம்பி கொலை: அண்ணன் கைது

மானாமதுரை அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Syndication

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே தம்பியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் அவரது அண்ணனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள வேம்பத்தூா் மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்த இளங்கோ மகன் லோகேஸ்வரன் (23). தனது தாயுடன் வசித்து வந்த இவரை கடந்த சில நாட்களாகக் காணவில்லை என குடும்பத்தினா் தேடி வந்தனா். இந்த நிலையில், வேம்பத்தூா் உப்பாற்று பாலம் அருகே வெட்டுக் காயங்களுடன் லோகேஸ்வரன் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அப்போது, லோகேஸ்வரனை அவரது அண்ணன் பிரகாஷ் (25) வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பிரகாஷை கைது செய்து விசாரித்த போது, அடிக்கடி லோகேஸ்வரன் தன்னிடம் தகராறு செய்து வந்ததால், அவரை வெட்டிக் கொலை செய்ததாக தெரிவித்தாா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT