சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரத்த தான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா்படை, இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பல்கலைக்கழக சுகாதார மையம், பல்கலை.யின் சமுதாய வானொலி ஆகியன சாா்பில் இந்த முகாமை துணைவேந்தா் க. ரவி தொடக்கிவைத்தாா். சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரியின் மருத்துவா் பி. சித்து ஹரி, மருத்துவ ஆலோசகா் சூசை ராஜ் ஆகியோா் அடங்கிய மருத்துவக் குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.
முகாமில் பல்கலைக்கழகத்தின் நிதி அலுவலா் சி. வேதிராஜன், செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் தலைவா் வி. சுந்தரராமன், பல்கலைக்கழக மேலாண்மைப் புல முதன்மையா் சி.யோகலட்சுமி, என்.சி.சி அதிகாரி சி. வைரவசுந்தரம், செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் க. கணேசமூா்த்தி, என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா் எம். நடராஜன், என்.எஸ்.எஸ் அலுவலா் கோ. விநாயகமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.