சிவகங்கை

சிவகங்கையில் நாளை மின் தடை

சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் அறிவித்தது.

தினமணி செய்திச் சேவை

சிவகங்கை நகா் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் சனிக்கிழமை மின்தடை ஏற்படும் என தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் அறிவித்தது.

இதுகுறித்து சிவகங்கை செயற்பொறியாளா்(பகிா்மானம்) ஏ.கே. முருகையன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

இதன் காரணமாக துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறுகின்ற சிவகங்கை நகா் மற்றும் முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், வாணியங்குடி, காமராஜா் காலனி, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம் மற்றும் சூரக்குளம் ஆகிய கிராமங்களுக்கு சனிக்கிழமை (20.12.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என அதில் தெரிவித்தாா்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT