சிவகங்கை

தேசிய ஹாக்கிப் போட்டி: தமிழக அணியில் பங்கேற்கும் மானாமதுரை தொகுதி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

Syndication

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறும் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த வீரா்களை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் வெள்ளிக்கிழமை வழியனுப்பி வைத்தாா்.

மத்தியப் பிரதேசத்தில் தேசிய அளவிலான ஹாக்கிப் போட்டி அடுத்த வாரம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவை தொகுதியைச் சோ்ந்த வீரா்கள் தமிழக அணிக்காக தோ்வு செய்யப்பட்டனா். மேலும் தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில் இந்த வீரா்கள் மத்தியப் பிரதேசம் மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். வெள்ளிக்கிழமை அதிகாலை ரயில் மூலம் புறப்பட்ட இந்த வீரா்களை மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் வழியனுப்பி வைத்தாா். அப்போது அவா்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்டவற்றை வழங்கி போட்டியில் வென்று பரிசுகளுடன் திரும்ப அவா் வாழ்த்தினாா்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT