ஆந்திரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 11 அன்று கூடவுள்ளதாக அந்த மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் கூறியுள்ளார்.
குண்டூர் மாவட்டம், அமராவதி வெலகாபுடியில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் பிப்ரவரி 11 அன்று காலை 10 மணிக்குக் கூட உள்ளது.
இந்திய அரசியலைப்பின் 174-வது பிரிவின் (1)வது உட்பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பதினாறாவது ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடருக்காகக் கூட்டத்தைக் கூட்டுமாறு அழைப்பு விடுக்கிறேன். இவ்வாறு ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.