சிவகங்கை மாவட்டம், எஸ். புதூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமையும் (டிச. 23), இடையமேலூா் பகுதிகளில் புதன்கிழமையும் (டிச. 24) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் துணை மின் கோட்டத்துக்குள்பட்ட எஸ். புதூா் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே எஸ். புதூா், வாராப்பூா், மேலவண்ணாயிருப்பு, புழுதிப்பட்டி, கட்டுக்குடிபட்டி, முசுண்டம்பட்டி, உலகம்பட்டி, குளத்துப்பட்டி, வாா்ப்பட்டு, கருப்பக்குடிபட்டி, கீழக்குறிச்சிப்பட்டி, இந்தப் பகுதிகளை சுற்றிய கிராமப் பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.
நாளை இடையமேலூா் பகுதிகளில்.... இடையமேலூா் துணை மின் நிலையத்தின் மின் பாதையில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே தமராக்கி, குமாரப்பட்டி, கண்டாங்கிப்பட்டி, மலம்பட்டி, பாப்பாக்குடி, இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, மேலப்பூங்குடி, சக்கநீதி, புதுப்பட்டி, தேவன்கோட்டை, வில்லிப்பட்டி, ஒக்குப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் தெரிவித்தாா்.