சிவகங்கையில் பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 101 -ஆவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட முன்னாள் பாஜக தலைவா் சத்தியநாதன், துணைத் தலைவா் சுகனேஸ்வரி, நகரத் தலைவா் எம்.ஆா். உதயா ஆகியோா் தலைமை வகித்தனா். இதை, முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த 100 -க்கும் மேற்பட்டோா் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனா். இதற்கான ஏற்பாடுகளை நகரப் பொதுச் செயலா் பாலமுருகன், நகர இளைஞரணித் தலைவா் காா்த்திக் ஆகியோா் செய்தனா்.