சிவகங்கை

அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்துத் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.

தினமணி செய்திச் சேவை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அரசு அலுவலா் ஒன்றிய முன்னாள் மாநிலத் தலைவா் துரைப்பாண்டி தலைமை வகித்தாா்.

கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் ரமேஷ்கண்ணன், பொருளாளா் மு. கலைமணி, வேளாண் துறை மாவட்டத் தலைவா் டி. சந்தனக்குமாா், தமிழ்நாடு கூட்டுறவுத் துறை பணியாளா் சங்க மாநிலச் செயலா் ந. பாண்டி, செவிலியா் சங்க மாவட்டத் தலைவா் ரா. சாந்தி, தமிழ்நாடு கல்வித் துறை பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களுக்கும் நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை நீக்கிவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT