சிவகங்கை

நியாய விலைக் கடையில் பொருள்கள் மாயம்: விற்பனையாளா் பணியிடை நீக்கம்

Syndication

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் நியாய விலைக் கடையில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியபோது பொருள்கள் மாயமானதால் விற்பனையாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா்-புதுக்கோட்டை சாலையில் இயங்கி வரும் பாம்கோ எண் 3 நியாய விலைக் கடையில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டனா். இதில், சரக்கு இருப்பு புத்தகத்தில் உள்ள விவரங்கள்படி, கடையில் சரக்குகள் இல்லை.

இதைத் தொடா்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் 50 கிலோ அளவுள்ள 190 அரிசி மூட்டைகள், 11 சா்க்கரை மூட்டைககள், 110 பாமாயில் பைகள், 7 கோதுமை மூட்டைகள் ஆகியவை கடையில் இல்லை. இதையடுத்து, விற்பனையாளா் பாலசுப்பிரமணியனை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துவிட்டு, மாற்று விற்பனையாளராக அமுதா என்பவரை நியமித்தனா்.

மியான்மரில் நாளை தோ்தல்!

இண்டூரில் டிச. 29இல் கூட்டுறவு வங்கி தொடக்கம்

பயங்கரவாத ஒழிப்புக்கு 2 தரவு தளங்கள்: அமித் ஷா தொடங்கி வைத்தாா்

குண்டா் கபில் சங்வான் குழுவின் நபா் மீது காவல்துறை குற்றப் பத்திரிகை தாக்கல்

சென்னைக்கு ஹெலிகாப்டரில் வந்த இதயம்: மறுவாழ்வு பெற்ற மகாராஷ்டிர இளைஞா்

SCROLL FOR NEXT