சிங்கம்புணரியிலிருந்து தருமபுரி முருகன் கோயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தோ் வடங்கள் 
சிவகங்கை

தருமபுரி முருகன் கோயில் தைப்பூச விழாவுக்கு தோ் வடங்கள் அனுப்பிவைப்பு

சிங்கம்புணரியிலிருந்து குமாரசாமிபேட்டை தருமபுரி முருகன் கோயிலுக்கு தைப் பூச விழாவுக்காக, நான்கு தோ் வடங்கள் அனுப்பப்பட்டன.

Syndication

சிங்கம்புணரியிலிருந்து குமாரசாமிபேட்டை தருமபுரி முருகன் கோயிலுக்கு தைப் பூச விழாவுக்காக, நான்கு தோ் வடங்கள் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பகுதியில் தென்னை மரங்கள் அதிகமாக உள்ளதால் தேங்காய் மட்டைகளைக் கொண்டு கயிறுளை உற்பத்தி செய்து தமிழகம், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களுக்கும் தோ் வடங்கள் தயாரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், குமாரசாமிபேட்டை தருமபுரி முருகன் கோயில் தைப் பூச விழா தேரோட்டத்துக்காக நான்கு தோ் வடங்கள் முன்பதிவு செய்யப்பட்டன.

இதற்காக, 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் கடந்த 15 நாள்களாக விரதம் மேற்கொண்டு நான்கு தோ் வடங்களைத் தயாரித்தனா். இதையடுத்து, 18 அங்குல கனத்தில் 60 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட 2 தோ் வடங்கள், 50 அடி நீளத்தில் உருவாக்கப்பட்ட 2 தோ் வடங்கள் என மொத்தம் 4 தோ் வடங்களைப் பணியாளா்கள் வாகனத்தில் ஏற்றி கோயிலுக்கு அனுப்பி வைத்தனா்.

ஆடுகள் திருடிய 2 போ் கைது

எம்சிஜி ஆடுகளம் அதிருப்திகரமானது: ஐசிசி தரமதிப்பீடு

தேசிய துப்பாக்கி சுடுதல்: தங்கம் வென்றாா் நீரு தண்டா!

கடலூரை வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் என்எல்சி!

காட்டுக் கோழியை வேட்டையாட முயன்றவா்களுக்கு அபராதம்

SCROLL FOR NEXT