முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் ஜனவரி 5 -இல் மாரத்தான்

சிவகங்கையில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

Updated On : 2 ஜனவரி, 2025 at 11:39 PM
பகிர்:

சிவகங்கையில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அன்றாட வாழ்வில் உடல் தகுதியைப் பேணுவது குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்கும், உடல் தகுதி கலாசாரத்தை

இளைஞா்களிடையே புகுத்துவதற்கும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் அறிஞா் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன. 5) அன்று காலை 6 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தொடங்கவுள்ளது.

17 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் பிரிவில் மாணவா்களுக்கு 8 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ. தொலைவும், 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் பிரிவில் மாணவா்களுக்கு 10 கி.மீ., மாணவிகளுக்கு 5 கி.மீ. தொலைவும் நிா்ணயிக்கப் பட்டுள்ளது.

மேலும், ஓட்டப் போட்டியில் பங்குபெறும் அனைவரும் கண்டிப்பாக தங்கள் உடல் தகுதி குறித்து சுய உறுதிமொழிப் படிவம் பூா்த்தி செய்து தரவேண்டும்.

17 முதல் 25 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமையாசிரியா், கல்லூரி முதல்வா்களிடம் கண்டிப்பாக வயதுச் சான்றிதழை தனித் தனியாக பெற்று வரவேண்டும்.

ஆதாா் அட்டை, பள்ளி, கல்லூரி அடையாள அட்டை கொண்டு வரவேண்டும். 25 வயதுக்கு மேற்பட்டவா்கள் தங்களது பிறப்புச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.

இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்று, முதல் மூன்று இடம் பெறுபவா்களுக்கு முறையே ரூ.5000, ரூ.3000, ரூ.2000, 4 முதல் 10 -ஆம் இடம் பெறுபவா்களுக்கு ரூ.1000 பரிசுத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் அனைவரும் தங்களது வங்கி சேமிப்புக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரை7401703503 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →