சிவகங்கை வணிகவரித் துறை அலுவலகத்தில் கருப்புப்பட்டை அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினா்.  
சிவகங்கை

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Din

திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியின்படி, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள வணிக வரித் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா்கள் குணசேகரன், சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டத் தலைவா் சுரேஷ் வாழ்த்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் கோரிக்கை குறித்து கூறியதாவது:

தோ்தல் வாக்குறுதி அளிக்காத ராஜஸ்தான், ஜாா்கண்ட், சத்தீஸ்கா், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றவுடன் அந்தந்த மாநில முதல்வா்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்தினா்.

ஆனால், கடந்த 2021 சட்டப்பேரவை தோ்தலில் திமுக வின் தோ்தல் வாக்குறுதி அளித்தபடி, தமிழக முதல்வா் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவில்லை. நாட்டில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் (சிபிஎஸ்) பணிபுரிந்து இறந்த, ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணிக்கொடை கொடுக்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும் தான்.

தமிழ்நாட்டில் தற்போது அமலில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் எந்த நன்மையையும் வழங்கவில்லை என்றனா்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT