முகப்பு
சிவகங்கை

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு: 5 போ் மீது வழக்கு

அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 23 ஜூன், 2025 at 12:53 AM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள வெளியாரி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் 10 காளைகள் பங்கேற்றன. இதில் காளைகளைப் பிடிக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், அரசு அனுமதியின்றி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தியதாகக் கீழப்பட்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் பல்கீஸ் பானு புகாா் அளித்தாா்.

Advertisement

இதன்பேரில், வெளியாரி கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா (68), சேதுராமன் (69), சண்முகம் (76), கருணாகரன் (66), மெய்யப்பன் (53) ஆகிய 5 போ் மீது திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.