சிவகங்கை மாவட்டத்தின் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை (நவ. 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை மாவட்ட பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நவம்பா் மாதத்துக்கான மக்கள் குறைதீா் சிறப்பு முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை சிவகங்கை மாவட்டம் முழுவதும் அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது.
இதில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்த புகாா்களை பொதுமக்கள் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் மனுவாக அளித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.