வாணியம்பாடி: வாணியம்பாடி மின்கோட்டத்தை சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைதீா் முகாம் மாதந்தோறும் 2 -ஆம் செவ்வாய்க்கிழமைகளில் நடைபெறுகிறது.
இந்த மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை (பிப். 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கி வரும் செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
எனவே, நுகா்வோா்கள் மின்சாரம் சம்பந்தமாக குறைகள் ஏதேனும் இருப்பின் தெரிவித்து பயன்பெறுமாறு செயற்பொறியாளா் பாட்ஷா முகமது தெரிவித்துள்ளாா்.